Published : 10 Jun 2015 07:47 PM
Last Updated : 10 Jun 2015 07:47 PM

நாடகக் கலைகள் மூலம் சாதியை உடைக்க வேண்டும்: மாற்று நாடக இயக்கம் வலியுறுத்தல்

நாடகக்கலை மூலம் சாதியை உடைக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வுகளை மாணவர்களிடம் ஏற்படுத்தப்படும் என மாற்று நாடக இயக்கத்தின் புரவலர் அகிலா எழிலரசன் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் மாற்று நாடக இயக்கம் சார்பில் நாடக விழா தொடர்ச்சி யாக நடைபெற்றது வருகிறது. கடந்த 1-ம் தேதி தொடங்கிய விழா இன்றுடன் (10-ம் தேதி) நிறைவு பெறுகிறது. இந்நிலையில், 8-ம் நாள் நடந்த நாடக விழாவில் ‘பெத்தவன்’ என்ற தலைப்பில் சாதியின் போலித் தனத்தை வெளிப் படுத்தும் நாடகம் அரங்கேற்றப் பட்டது. இதில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் நடித்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாற்று நாடக இயக்கத்தின் புரவலரும், திராவிடக் கழகத்தை சேர்ந்த கே.சி.அகிலாஎழிலரசன் பேசியதாவது:

தெருக்கூத்தை பின்புலமாக கொண்ட மாவட்டம் வேலூர் மாவட்டம். திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் இதுபோன்ற நாடகங் களை மாணவர்கள் நடத்துவது வரவேற்கத்தக்கது. வேலூர் மாவட்டத்தில் மரபுக்கலைகளை பாதுகாப்பது கடமை என மாற்று நாடக இயக்கம் கருதுகிறது.

கல்லூரி மாணவர்கள் சார்பில் எழுத்தாளர் இமையத்தின் சிறுகதையை தழுவி ‘பெத்தவன்’ என்ற நாடகம் இங்கு நடைபெற்றது. இதில் சாதி என்ற பெயரில் நடக்கும் கவுரவக்கொலைகள் குறித்தும், சாதியின் போலித் தனத்தை இந்த நாடகம் வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் சாதியை உடைத்தெறிய வேண் டும். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெறும் தீண் டாமைக் கொடுமைகள் நிலைத்தால் நெஞ்சம் பதறுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைத்துறை பேரசிரியர் முனைவர் இரா. ராஜீ ‘பெத்தவன்’ நாடகத்தை இயக்கி னார். சாதியின் கோரத்தை புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் களின் யதார்த்தமான நடிப்பு பார்வை யாளர்களை பிரமிக்க வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x