இடைத்தேர்தலில் முதல்வரை எதிர்த்து வெற்றி பெற முடியாது: ஆர்.சி.பால்கனகராஜ் கருத்து

இடைத்தேர்தலில் முதல்வரை எதிர்த்து வெற்றி பெற முடியாது: ஆர்.சி.பால்கனகராஜ் கருத்து
Updated on
1 min read

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றதற்கு எந்த நிர்பந் தமும் இல்லை என்று தமிழ் மாநிலக் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக ‘தி இந்து’ வுக்கு அவர் அளித்த பேட்டி:

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர் தலில் வேட்பு மனுவை வாபஸ் பெற மிரட்டல் விடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதும் நெருக்கடியா?

எங்களுக்கு எந்தவிதமான நிர்பந்தமோ, மறைமுக ஒப்பந்தமோ, வேறு மிரட்டல்களோ நிச்சயமாக கிடையாது. பொருளாதாரப் பிரச்சினை, பிரச்சாரத்துக்கு குறைந்த நாட்கள் போன்ற பல காரணங்களால் போட்டியில் இருந்து விலகினோம்.

கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து பின்வாங்கியது ஏன்?

முதல்வரை எதிர்த்து வெற்றி பெற முடியாது. இருந்தாலும், புதிய கட்சிக்கு இத்தேர்தல் மூலம் கொஞ்சம் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். இப்போதைய சூழ்நிலையில் அதற்கும் வாய்ப்பில்லை என்பதால் மனுவை வாபஸ் பெற்றோம். இது, இளைஞர்கள் மத்தியில் ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டதாக கருதுகிறேன். அரசியலில் தாழ்ந்து போவது உயர்வதற்காகத்தான்.

பொதுத்தேர்தலுக்கு ஓராண்டே இருப்பதால் கட்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்தி கட்டாயம் என்று சொல்வ தால் எங்களை திராவிடக் கட்சிகள் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு பால்கனகராஜ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in