

அரசும், நீதிமன்றமும் கொண்டு வரும் சட்டங்களை களத்தில் நடை முறைப்படுத்துவது போக்குவரத்து காவல் துறையினர்தான். சாலையில் நின்று சட்டத்தை மீறுபவர்களை கண்காணிப்பவர்களும் இவர்கள் தான்.
கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து இவர்கள் தெரிவித்த கருத்துகள்:
"விபத்தின்போது தலையில் அடிபடுவதால்தான் பலர் உயிரிழக் கின்றனர். தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்” என்று கூறினால், “அதெல்லாம் வேகமா போறவங் கள போடச்சொல்லுங்க சார், நாங்க 40, 50 கி.மீ. வேகத்துலதான் போவோம். எங்களுக்கு ஒன்னும் ஆகாது. எந்த இடத்துல எப்படி போகனும்னு எங்களுக்கு தெரியும். நல்ல விஷயத்துக்கு போகும்போது சாவை பத்தி பேசாதீங்க” என்பார்கள்.
அப்புறம், ஹெல்மெட் போட்ட துல தலை முடி உதிர்ந்திடுச்சி சார். இங்க பாருங்கன்னு தலையை காண்பிப்பார். இந்த வெயிலில் எப்படி சார் ஹெல்மெட் போட முடியும். எங்கள மட்டும் பிடிக் கிறீங்க, அவங்கள ஏன் பிடிக்க மாட்டேங்கறீங்கன்னு வழக்கறிஞர், பத்திரிகையாளர் ஸ்டிக்கர் ஒட்டிய வர்களையும், அரசியல் கட்சி கொடி கட்டிய வாகனங்களையும் காண்பித்து கேள்வி கேட்பாங்க.
வழக்கறிஞர், பத்திரிகையாளர் ஸ்டிக்கர் மற்றும் அரசியல்வாதி வாகனங்களை பிடித்து நிறுத்தி னால் அந்த இடத்தில் புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பி எங் களுக்கே தொல்லை கொடுப்பார் கள். ஆனால் அதிலும் ஒரு சிலர் ரொம்ப மரியாதையாக நடந்து கொள்வார்கள்.
“ஹெல்மெட் போடுறது கட்டா யம்னு ஒரு தடவ சொன்னாங்க, அப்புறம் விருப்பப்பட்டா போடுங் கன்னு சொன்னாங்க. ஹெல்மெட் போடமா போறப்ப பல தடவ போலீஸ்காரங்க பார்த்துட்டு சும்மா இருப்பாங்க. திடீர்னு கூப்பிட்டு அபராதம் போடுவாங்க" இப்படியெல்லாம் டயலாக் பேசுகிறார்கள்.
விபத்தில் உயிரிழப்பை தடுக் கத்தான் ஹெல்மெட் அணிய சொல்கிறோம். எல்லாம் மக்களின் நன்மைக்காகத்தான்.
ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூறி “நீங்களே முன் வந்து ஹெல்மெட் அணிய வேண்டும்” என்று கூறினாலும் கேட்கமாட்டார் கள். அவர்கள் செய்த தவறுக்குத் தான் அபராதம் விதிக்கிறோம் என்பதுகூட புரியாமல் எங்களையும், எங்கள் குடும்பத்தையும் பலவாறு பேசுவார்கள் அந்த நேரங்களில் கஷ்டமாக இருக்கும் என்று கூறினர்.
1,500 பேரிடம் அபராதம்
போக்குவரத்து துணை ஆணையர் சிவானந்தம் கூறும்போது, "ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேல் அவர் செய்யும் விதிமீறல்களை பொறுத்து அபராதத் தொகை உயரும். ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக சென்னை நகரில் தினமும் 1,400 முதல் 1,500 பேரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது" என்றார்.