

‘தி இந்து’வின் உங்கள் குரலில் கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த குஞ்சிதபாதம் கூறியதாவது:
கிழக்குத் தாம்பரம் சேலையூர் பகுதியில் காமராஜர் சாலை, அஹோபில மடம் அருகில் உள்ள பகுதிகளில் பகல் நேரத்தில் அடிக்கடி மின் விநியோகம் தடை படுகிறது. இரவு நேரங்களி்ல் இரண்டு மூன்று மணி நேரம் தடைபடுகிறது. அதிகாரிகளை கேட்டால் ‘பேக் ஃபீடிங்’ முறையில் மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். நள்ளிரவில் இரண்டு மூன்று மணி நேரம் மின் விநியோகம் தடைபடுவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தாம்பரம் மின்வாரிய உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘‘கடந்த வாரத்தில் இங்குள்ள துணை மின் நிலையத்தில் குறைந்த திறன் மின்மாற்றியை மாற்றி அதிக திறனுள்ளதை பொருத்தினோம் அதனால் மூன்று நாட்களும், கேபிள் பிரச்சினையால் இரண்டு நாட்களும் மின் விநியோகத்தில் பாதிப்பிருந்தது. மின் விநியோகம் ‘பீடர்கள்’ வாயிலாக வழங்கப்படுகிறது. ஒரு பகுதிக்கான பீடரில் பிரச்சினை ஏற்படும் போது, வேறு ஒரு பீடரில் இருந்து ‘பேக் பீடிங்’ அடிப்படையில் மின்சாரம் விநியோகிக்கப்படுவது வழக்கம். இதனால், சிலநேரங்களில் மின்சாரம் தடைபட்டு வரும். மற்றபடி இப்பகுதியில் தற்போதைக்கு மின் விநியோகத்தில் பாதிப்பில்லை.
அந்தந்த பகுதி மி்ன்மாற்றி யில் ஏற்படும் பிரச்சினைகள் உடனுக்குடன் சீரமைக்கப்படு கின்றன. பொதுமக்கள் மின் விநியோகத்தில் குறைபாடு குறித்து புகார் அளித்தால் உடனடியாக சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.