

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடந்தன. பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் சுமந்தும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தன. அறுபடை வீடுகளி லும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
சென்னையில் வடபழனி, கந்தகோட் டம், திருப்போரூர், வல்லக்கோட்டை, குன்றத்தூர் ஆகிய இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய் யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. சில இடங்களில் லட்சார்ச்சனை களும் நடத்தப்பட்டன.
வடபழனி முருகன் கோயி லில் நேற்று அதிகாலை மூலவ ருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நூற்றுக்கணக்கான பக்தர் கள் அலகு குத்தியும் பால் குடம் மற்றும் காவடி எடுத்து வந்தும்நேர்த்திக்கடன் செலுத் தினர். ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர்.