Published : 18 Jun 2015 08:09 AM
Last Updated : 18 Jun 2015 08:09 AM

துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வு பணிகளை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும்: பிரச்சினை மிகவும் தீவிரமானது என நீதிபதிகள் கருத்து

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான சட்ட ரீதியான மறுவாழ்வுப் பணி களை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. மறுவாழ்வுப் பணிகள் நிறைவேற்றப்படுவது குறித்து உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மனிதக் கழிவுகளை அகற் றும் பணியில் மனிதர்களை ஈடு படுத்துவதை தடை செய்வது மற்றும் அவர்களுக்கான மறு வாழ்வுப் பணிகளை நிறைவேற்று வது தொடர்பாக 2013-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றி முழுமையான கணக்கெடுப்பு நடத்துவது, அந்தத் தொழிலாளர் களுக்கு மாற்றுப் பணி உள்ளிட்ட மறுவாழ்வு திட்டங்களை செயல் படுத்துவது, கழிவுகளை அகற் றும் பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணம் வழங்குவது, இந்தப் பணிகளை செயல்படுத்துவதற்கான மாவட்ட, மாநில அளவிலான குழுக்களை அமைப்பது உள்ளிட்ட பல அம்சங்கள் பற்றி இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநரான சமூக ஆர்வலர் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். 2013-ம் ஆண்டின் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங் களை உடனடியாக அமல்படுத்து மாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

மேலும், 1993-ம் ஆண்டிலிருந்து பாதாள சாக்கடை கால்வாய்கள் மற்றும் செப்டிக் டேங்க் போன்ற இடங்களில் அடைப்புகளை அகற்று வதற்காக இறங்கியபோது விஷ வாயு தாக்கி 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள னர். ஆனால் தமிழக அரசு சுமார் 50 பேரை மட்டும் அடையாளம் கண்டுள்ளது. அவர்களில்கூட 29 தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு மட்டுமே நிவாரணம் வழங் கப்பட்டுள்ளது. ஆகவே, உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரின் குடும் பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கவும், துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கான மறுவாழ் வுப் பணிகளை செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் நாராயணன் கூறியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அண்மையில் பிறப்பித்த உத்தர வில் கூறியுள்ளதாவது:

மனுதாரர் கூறியிருக்கும் குற்றச் சாட்டுகளை மனதில் கொண்டு 2013-ம் ஆண்டின் சட்டத்தில் கூறப் பட்டுள்ள அம்சங்களை செயல்படுத் தவும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அமல்படுத்தவும் அரசு அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது.

இந்த விவகாரத்தில் ஏற்படும் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் மற்றும் சட்டத்தை செயல்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை கள் பற்றி இந்த நீதிமன்றம் கண்காணிக்கும். மேலும் இந்த விவகாரத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் தொடர்பாக மனுதாரரும் 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பற்றி மனுதாரர் நாராயணன் கூறும்போது, “மாநிலம் முழுவதும் துப்புரவு தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற கணக் கெடுப்பு முழுமையாக நடைபெற வில்லை. அந்த கணக்கெடுப்பு முடிந்தால்தான் தொழிலாளர்களுக் கான மறுவாழ் வுப் பணிகளை செயல்படுத்த முடியும். இந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். உயிரிழந்த தொழி லாளர்கள் அனைவரது குடும் பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x