Published : 29 Jun 2015 10:30 AM
Last Updated : 29 Jun 2015 10:30 AM

தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான சம்பளம்: காற்றில் பறக்கும் ஏஐசிடிஇ விதிமுறை

பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மிகக் குறைவான சம்பளம் கொடுக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. சம்பள விஷயத்தில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) விதிமுறைகள் முறை யாக பின்பற்றப்படுவதில்லை என்று ஆசிரியர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

தகவல் தொழில்நுட்பம், சாப்ட் வேர் துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு களைத் தொடர்ந்து தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் பெருகின. கலை அறிவியல் கல் லூரிகளுடன் ஒப்பிடும்போது பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகம். ஏற்கெனவே 500-க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கிவரும் நிலையில், ஆண்டு தோறும் புதிய கல்லூரிகளும் வந்தவண்ணம் உள்ளன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரிகளிலும், பொறி யியல் கல்லூரிகளிலும் உதவிப் பேராசிரியர்களுக்கு ரூ.45 ஆயிரம் அளவுக்கு சம்பளம் வழங்கப்படு கிறது. பிஎச்டி உள்ளிட்ட உயர் கல்வித்தகுதிக்கு கூடுதலாக ஊதிய உயர்வு (இன்கிரிமென்ட்) உண்டு.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில், பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட கல் வித்தகுதி, சம்பளம் என பல்வேறு விதிமுறைகளை நிர்ணயித்துள்ளது.

அதன்படி, ஒரு சில தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டுமே ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் வழங்குகின்றன. பெரும்பாலான கல்லூரிகள் ஏஐசிடிஇ விதிமுறை களை கண்டுகொள்வது இல்லை. அந்தக் கல்லூரிகள், ஆசிரியர் களுக்கு மிகக்குறைந்த சம்பளமே வழங்கி வருகின்றன. பிஇ, எம்இ முடித்துவிட்டு ஒருபுறம் பிஎச்டி படித்துக் கொண்டிருக்கும் ஆசிரி யர்களுக்கு ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என்ற அளவில்தான் நிர்வாகத்தினர் சம்பளம் வழங்குகின்றனர்.

குடும்ப சூழல் காரணமாக வேறுவழியின்றி ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்துக்கு பணியாற்ற முன்வருவதே இதற்கு முக்கிய காரணம். திறமை, பணி அனுபவம் போன்றவற்றை நிர்வாகத்தினர் கருத்தில்கொள்வது இல்லை.

இதுகுறித்து மாநில தொழில் நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘கடந்த 2010-11 வரையில் பொறியியல் கல்லூரிகள் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. தற்போது தடையின்மைச் சான்று, இணைப்பு அங்கீகாரம் வழங்குவதுடன் சரி. மற்ற அனைத்து விஷயங்களும் ஏஐசிடிஇ கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட சம்பளத் தைவிட குறைவாக ஊதியம் வழங்கினால் அதுகுறித்து ஏஐசிடிஇ-யிடம்தான் ஆசிரியர்கள் புகார் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

பொறியியல் கல்லூரிகளின் நிலை இவ்வாறு இருக்க, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பகுதி நேரமாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப் பூதியமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே பெறுகின்றனர்.

தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வரும் அவர்கள், ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசுப் பணியில் 10-ம் வகுப்பு முடித்த இளநிலை உதவியாளர்களுக்கே ரூ.17 ஆயிரம் அளவுக்கு சம்பளம் பெறும் நிலையில், முதுகலை பட்டம், எம்பில், பிஎச்டி முடித்த வர்களுக்கு வெறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவது எந்த வகையில் நியாயம் என்று கவுரவ விரிவுரையாளர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x