Published : 02 Jun 2015 08:07 AM
Last Updated : 02 Jun 2015 08:07 AM

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம் - பாதுகாப்புக்கு துணை ராணுவம் வருகிறது

இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகு திக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணை யம் அறிவித்தது. அதன்படி, இந்தத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி 10-ம் தேதி வரை நடக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள், சென்னை மாநகராட்சி அலுவலக மான ரிப்பன் மாளிகையில் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடு கிறார். அக்கட்சி சார்பில் 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, பிரச்சாரத்தை யும் தொடங்கிவிட்டனர். ஜெய லலிதா, 5-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என தெரிகிறது.

திமுக, தமாகா, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. தேமுதிக, இடதுசாரி கட்சிகள் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறியுள்ள சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.

இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதிக்கான பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள், தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ குழுக்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு அவர்களும் பணிகளை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 3 பறக்கும் படைகள் பணியில் உள்ளன. சூழ்நிலையைப் பொறுத்து அடுத்தகட்டமாக குழுக் களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படும். தேர்தல் பார்வையாளராக வருமான வரித்துறை அதிகாரி ராகுல் ரமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3-ம் தேதி முதல் பணிகளை தொடங்குவார். தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்து தேர்தல் பொறுப்பாளரான சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து பட்டியல் தயாரித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் 3-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பெயரை தொகுதியில் இருந்து 10 பேர் முன்மொழிய வேண்டும். கட்சி வேட்பாளராக இருந்தால் ஒருவர் முன்மொழிந்தால் போதுமானது.

வேட்பு மனுக்களை காலை 11 மணியில் இருந்து 3 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் பாதுகாப்புக்காக வழக்கம் போல துணை ராணுவப்படை யினர் பணியில் ஈடுபடுத்தப்படு வர். வாக்கு இயந்திரங்கள் வைக் கப்படும் இடம், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x