

சென்னையில் 25 பேருந்து தட சாலைகள் ஒரு வாரத்தில் புதுப் பிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் உலக முதலீட் டாளர்கள் மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதை யொட்டி 194 பேருந்து தட சாலை களை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் முதல் கட்டமாக 40 சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பொது வாக ஏற்கெனவே போடப்பட்ட சாலைகள் மீதே புதிய சாலை போடப்படும். ஆனால் இந்த முறை, ஏற்கெனவே உள்ள சாலைகளை தோண்டியெடுத்து அதன் பிறகு புதிய சாலை போடப்படுகிறது.
இத்திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.330 கோடியும் சென்னை மாநகராட்சி ரூ.120 கோடியும் ஒதுக்கியுள்ளது. முதல் கட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்ட 40 சாலை களில் கிரீம்ஸ் சாலை, சர்தார் பட்டேல் சாலை, பீட்டர்ஸ் சாலை உள்ளிட்ட 25 சாலைகளில் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள் ளன. அவை ஒரு வாரத்தில் புதுப் பிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு பல நாட்களுக்கு பிறகே புதிய சாலை போடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையை தினமும் பயன்படுத்தும் வசுந்தரா இதுபற்றி கூறும்போது, “இந்த வழியில் 3 முக்கிய மகளிர் கல்லூரிகள் உள்ளன. அதனால் காலை நேரத்தில் பலர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். சாலையை தோண்டி 5 நாட்களாகி யும் புதிய சாலை போடப்பட வில்லை. இதனால் ஸ்கூட்டர் போன்ற சிறிய இரு சக்கர வாகனங் களில் வருபவர்கள் அடிக்கடி கீழே சறுக்கி விழுகிறார்கள். இப்பகுதியில் 2 நாட்களுக்கு போக்குவரத்தை வேறு பக்கம் திருப்பி விட்டு பணிகளை சீக்கிரம் முடித்து விடலாம்” என்றார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எல்லா சாலைகளையும் ஒரே நேரத்தில் தோண்டி எடுத்தால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் முதலில் 40 சாலைகளில் பணிகளைத் தொடங்கியுள்ளோம். பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகார்கள் வருவதால், விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை அனுமதி கிடைக்காததால் இரவில் மட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.