

சென்னையைச் சேர்ந்தவர் ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜன். இவர் கடந்த 2006-ம் ஆண்டு ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றபோது தீவிரவாதிகள் இருவர் அப்பகுதியில் நுழைந்து தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் தேர்தல் அதிகாரிகள் இருவரை சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முகுந்த் வரதராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிரவாதிகளுடன் மிக தைரியத்துடன் நேருக்கு நேர் சண்டையில் ஈடுபட்டார். இச்சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு தீவிரவாதியை பிடிக்க முயன்ற போது, தீவிரவாதி நடத்திய தாக் குதலில் முகுந்த் வரதராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பல னின்றி உயிரிழந்தார். நாட்டுக் காக தனது உயிரைத் தியாகம் செய்ததற்காக அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப் பட்டது.
இந்நிலையில், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத் தில் மறைந்த ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் நினை வாக அவரது மார்பளவு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்சிலையை அவரது மனைவி இந்து திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், முகுந்த் வரதராஜனின் பெற்றோர், மகள் மற்றும் ராணுவ பயிற்சி மையத்தின் அதிகாரி கமாண்டன்ட் ரவீந்தர பிரதாப் சிங் சாஷி, துணை கமாண்டன்ட் கோபால கிருஷ்ணன் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.