

சென்னையிலுள்ள ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் 21 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 2015-16-ம் கல்வியாண்டில் ஏற் படுகின்ற காலியிடங்களுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரரின் பெற்றோர் களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்துக்கு அருகில் உள்ள விடுதிகளிலிருந்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பள்ளி விடுதி களுக்கான விண்ணப்பத்தை ஜூன் 5-ம் தேதி முதலும், கல்லூரி விடுதிகளுக்கான விண்ணப்பத்தை கல்லூரி திறக்கும் நாளிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தில் கோரி யுள்ள ஆவணங்களுடன் 3 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை இருப்பின் அதன் நகல் ஆகியவற்றில் சுய சான்றொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங் களை பள்ளி மாணவர்கள் 19-ம் தேதிக்குள்ளும், கல்லூரி மாண வர்கள் ஜூலை 14-ம் தேதிக் குள்ளும் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.