Published : 06 Jun 2015 12:22 PM
Last Updated : 06 Jun 2015 12:22 PM

நாத்திகன் போல கருத்து சொல்லவில்லை: இளங்கோவன் விளக்கம்

மழை வேண்டி இந்துமத சடங்குகளை நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது கண்டனத்துக்குரியது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

மழை வேண்டி பொதுப்பணித்துறை அலுவலகங்களில் பூஜை நடத்தக் கூடாது என்று >ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை வெளியிட்டதையடுத்து, "காமராஜர் காலத்தில் மேட்டூரில் தண்ணீர் திறக்கும்போது பூஜை நடத்தினார்கள், நேரு காலத்திலிருந்தே அரசு அலுவலகங்கள் கட்டும்போது பூமி பூஜை நடத்தினார்கள், காங்கிரஸ் ஆளும் கர்நாடகத்தில் அமைச்சர்கள் பூஜை செய்வதில்லையா?" என்று 'தி இந்து' ஆன்லைனில் வாசகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்த கேள்விகளை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் முன் வைத்தபோது, "எனது அறிக்கையை தெளிவாக படித்துப் பார்த்தால் நான் கூறியுள்ளது புரியும். காமராஜர் காலத்தில், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் போதுதான், ஆட்சியர் பூஜை நடத்தினார். ஆனால் இங்கே மழை வேண்டும் என்றே பூஜை நடத்துகிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் ஒரு மதம் சார்ந்த பூஜைகள் நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கை விடுவது ஏன்? வருண பகவானுக்கு பூஜை செய்பவர்கள், ஒரு மசூதியில் மழை வேண்டி தொழுகை நடத்த வேண்டியதுதானே? ஒரு தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தலாமே என்பதுதான் எனது கேள்வி. நாத்திக பார்வையுடன் பூஜையை விமர்சிக்கும் வகையில் நான் கருத்து சொல்லவில்லை" என்று பதிலளித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x