ஜூன் 29-ம் தேதி மெட்ரோ ரயில் சேவை: ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

ஜூன் 29-ம் தேதி மெட்ரோ ரயில் சேவை: ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை வரும் 29-ம் தேதி (திங்கள்கிழமை) முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

ஜூன் 29-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து மெட்ரொ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையரகமும் அனுமதி அளித்துள்ளது.

கோயம்பேடு, சிஎம்டிஏ, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 ரயில் நிலையங்களில் இறுதிகட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் நிலையங்களில் வண்ணம் பூசுதல், டிக்கெட் கவுன்ட்டர் திறப்பதற்கான ஏற்பாடு, எஸ்கலேட்டர்களில் ஆய்வு நடத்துதல், ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள், பார்க்கிங் வசதிகளுக்கு ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in