

சென்னை கடலோர காவல்படைக்கு சொந்த மான டார்னியர் ரக விமானம் கடந்த 8-ம் தேதி புதுச்சேரி அருகே மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெறு கிறது. இது தொடர்பான ஆலோசனை நடத்துவதற்காக தமிழக கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று புதுச்சேரிக்கு வந்தார். புதுச்சேரியில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை மண்டல அலுவலகத்தில் டிஐஜி கண் ணன் ஜெகதீஷ், கடலோரக் காவல் படை புதுச்சேரி மண்டல கமாண் டர் சோமசுந்தரம் மற்றும் அதிகாரி களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறும்போது:
‘‘இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான டார்னியர் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான தாக தகவல் கிடைத்ததுள்ளது. அதன்பேரில் தமிழக கடலோரக் காவல்படைக்கு சொந்தமான 10 படகுகள் மூலம் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
குறிப்பாக புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் வரை உள்ள கடல்பகுதியில் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அது மட்டுமில்லாமல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் தினமும் 35 ஆயிரம் படகுகள் மீன் பிடிப்பது வழக்கம். இவற்றுடன் 5 ஆயிரம் விசைப்படகு கள் ஆழ்கடலில் மீன்பிடித் தொழி லில் உள்ளன. அவர்கள் அனைவ ருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள் ளது. மேலும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் பாராசூட்டை பயன்படுத்தி படகில் செல்லும் பாராசைலிங் வீரர்கள் குழுவினர் தாயார் நிலையில் உள்ளனர்.
விபத்துக்குள்ளானதாக கூறப் படும் விமானம் மிதக்கும் தன்மைக் கொண்டது. எனவே அதில் பயணம் செய்த இரண்டு விமானிகள் உள் ளிட்ட மூன்று பேரும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களை மீட்க தீவிர மாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.
புதுச்சேரி டிஐஜி கண்ணன் ஜெகதீஷ் கூறும்போது: ‘‘தமிழக கடலோர காவல் படையுடன் இணைந்து மாயமான விமானத்தை தேடி வருகிறோம். மீனவர் முகேஷ், மற்றும் சில மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்டையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் விமானம் மாயமானது நம்பகத்தன்மையாக இல்லை’’ என்றார்.
நாகை கடற்பகுதியில் ரோந்து
மாயமான சிறிய ரக விமானத்தைத் தேடும் பணி நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், நாகப்பட்டினம், காரைக்கால் கடலோரப் பகுதிகளில் தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. நாகையில் கட லோர பாதுகாப்புக் குழும போலீ ஸார் ரோந்துப் படகு மூலம் நேற்று காரைக்காலுக்கும் வேளாங் கண்ணிக்கும் இடைப்பட்ட பகுதி யில் கடலில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். வேதாரண் யம், கோடியக்கரை கடல் பகுதியில் வேதாரண்யம் கடலோரக் காவல் குழுமத்தின் கண்காணிப்பாளர் சிவசங்கரன் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
காரைக்காலில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை மையத்தின் 3 சிறிய ரக ரோந்துக் கப்பல்கள் மற்றும் பெரிய ரக போர்க் கப்பல் ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக கடலோரக் காவல் படை காரைக்கால் மைய கமாண்டர் உதல்சிங் தெரிவித்தார்.
அதிகாரி ஆலோசனை
கடலோர காவல் படை இயக்குநர் பிஷ்ட், டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தார். கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய ஐஜி சத்தியபிரகாஷ் சர்மா மற்றும் அதிகாரிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். தேடுதல் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், காணாமல் போன விமானிகள் மூவரின் குடும்பத்தினரையும் பிஷ்ட் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.