சுயஉதவிக் குழுக்கள் மூலம் ரூ.5 ஆயிரம் கடன்: தமிழகத்தில் 15 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள்- ஊரக வளர்ச்சித் துறை திட்டம்

சுயஉதவிக் குழுக்கள் மூலம் ரூ.5 ஆயிரம் கடன்: தமிழகத்தில் 15 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள்- ஊரக வளர்ச்சித் துறை திட்டம்
Updated on
1 min read

தமிழகத்தில் இந்த ஆண்டு 15 லட்சம் வீடுகளில் கழிப்பறை கட்டித்தர ஊரக வளர்ச்சித்துறை திட்டமிட்டுள்ளது. ஏழை குடும்பங் களுக்கு முன்பணம் கிடைக்கும் வகையில், சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.5 ஆயிரம் கடன் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

தற்போது ‘தூய்மை இந்தியா’ என பெயர் மாற்றப்பட்டு, இத்திட்டத்திலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்ட ரூ.12 ஆயிரம் உதவித் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்கினாலும், கிராமப்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பது தொடர்கிறது. அவர்களிடம் கழிப் பறைகளை உபயோகப்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்துவது பெரும் சவாலாகவே உள்ளது.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 35 லட்சம் வீடுகளில் கழிப்பறை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கழிப்பறை உபயோகத்தை அதி கரிக்க மாநில ஊரக வளர்ச்சித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7.71 லட்சம் கழிப்பறைகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 7.34 லட்சம் கழிப்பறைகளும் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்து வது குறித்து ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கழிப்பறைகளை பயன்படுத் துவது குறித்து கிராம மக்களிடம் முதலில் விழிப்புணர்வு ஏற்ப டுத்தி, அதன்பிறகு திட்டத்தை செயல்படுத்துவது என்ற இலக்குடன் தற்போது களமிறங்கி உள்ளோம். இதற்காக கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றை பயன்படுத்த உள் ளோம். இதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன் ஊக்கத்தொகையும் வழங்கப் படுகிறது. கழிப்பறை கட்டுவதற்கு முன்வரும் பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால், கழிப்பறை முழுவதுமாக கட்டி முடித்து, அதை ஆய்வு செய்த பிறகே நிதி வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள், முதலில் பணத்தை செலவு செய்து கழிப்பறை கட்டுவதற்கு சிரப்படுகின்றனர். இதை தவிர்க்க, அவர்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் முதலில் ரூ.5 ஆயிரம் கடன் வழங்குமாறு கூறியுள்ளோம். அந்த தொகையில் அவர்கள் கழிப்பறையை கட்டும்போது 2 பிரிவாக நிதி விடுவிக்கப்படும். கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை அப்பகுதி இளநிலை பொறியாளர் ஆய்வு செய்த பிறகு முழு தொகையும் விடுவிக்கப்படும். பயனாளிகளை ஊக்குவித்த குழுக்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.300 வழங்கப்படும்.

இத்திட்டப்படி, முதல்கட் டமாக இந்த ஆண்டு 15 லட்சம் கழிப்பறைகள் கட்டி முடிக்கப் படும். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மீதமுள்ள கழிப்பறை களும் கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in