

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ மைய வீரர்களின் குழந்தைகள், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வெலிங்டன் ராணுவ மையத்தில் தென் பிராந்தியத்தைச் சேர்ந்த 12 முதல் 18 வயது வரையிலான 136 குழந்தைகள், இரண்டு ராணுவ அதிகாரிகள் தலைமையில் ஜெதளா கிராமத்தில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பத்து நாட்கள் நடந்த முகாமில், கிராம மக்களிடையே மது, புகையிலை ஒழிப்பு, சுகாதாரம், கழிவறை கட்டுதல் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
மேலும், கிராமத்திலுள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமின் ஒரு பகுதியாக, குன்னூரில் உள்ள முதியோர் இல்லத்தில், சேவை பணியில் ஈடுபட்டனர்.