சுற்றுச்சூழல் விதிமீறல்: 467 ஆலைகளுக்கு ‘சீல்’

சுற்றுச்சூழல் விதிமீறல்: 467 ஆலைகளுக்கு ‘சீல்’
Updated on: 
1 min read

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரியம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்பு: சுற்​றுச்​சூழல், காலநிலை மாற்​றத் துறை அமைச்​சர் ராஜீவ் மேற்​கொண்ட ஆய்வு மற்​றும் அறி​வுறுத்​தலின்​படி, விதி​மீறல்​களில் ஈடு​படும் தொழிற்​சாலைகள் மீது தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரியம் நட​வடிக்கை எடுத்து வரு​கிறது.

கடந்த 5 மாதங்​களில் சுற்​றுச்​சூழல் விதி​முறைகளை மீறியதற்​காக, நீர் (மாசு தடுப்பு, கட்​டுப்​பாடு) சட்​டம்-1974 மற்​றும் காற்று (மாசு தடுப்பு, கட்​டுப்​பாடு) சட்​டம்-1981 ஆகிய​வற்​றின்​கீழ் 467 தொழிற்​சாலைகள் மீது மூடுதல் மற்​றும் மின் இணைப்பை துண்​டித்​தல் ஆகிய உத்​தரவு​கள் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளன.

சுத்​தி​கரிக்​கப்​படாத கழிவுநீரை நீர்​நிலைகளில் வெளியேற்​றுதல், அனுமதி பெறாமல் தொழிற்​சாலைகளை இயக்​குதல், நிர்​ணயிக்​கப்​பட்ட புகை வெளியேற்​றம் மற்​றும் கழிவுநீர் வெளியேற்ற தரநிலைகளை மீறுதல் ஆகியவை இத்​தகைய விதி​மீறல்​களில் அடங்​கும். சுற்​றுச்​சூழல் சட்​டங்​களின்​படி விதி​முறைகளைப் பின்​பற்​றாத தொழிற்​சாலைகள் மீது பாரபட்​சமின்றி நட​வடிக்கை எடுக்​கப்​படும்.

சுற்றுச்சூழல் விதிமீறல்: 467 ஆலைகளுக்கு ‘சீல்’
அரசு பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் உத்தரவு

X