சியஸ் கார் திருவிழா: மாருதி சுசூகி நாளை நடத்துகிறது

சியஸ் கார் திருவிழா: மாருதி சுசூகி நாளை நடத்துகிறது
Updated on
1 min read

இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகி சென்னையில் நாளை (ஜூன் 20) சியஸ் கார் திருவிழாவை நடத்தவுள்ளது.

சென்னையில் லீ மெரிடியன், தாஜ் கன்னிமரா, தி கிரீன் பார்க் ஆகிய ஹோட்டல்களில் நாளை காலை 10 மணி முதல் 8 மணி வரை இத்திருவிழா நடைபெறும்.

அப்போது சியஸ் மாடல் காரின் எல்லா ரகங்களும் காட்சிக்கு வைக்கப்படும். மேலும் பல்வேறு ஆலோசகர்கள் கலந்துகொண்டு அந்த காரின் சிறப்புகள் குறித்து எடுத்துக் கூறுவார்கள். வாடிக்கையாளர்களின் சந்தேகங் களையும் போக்குவார்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சியஸ் காரில் டெஸ்ட் டிரைவ் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களின் பழைய கார்களை மதிப்பீடு செய்து தெரிவிக்கப்படும். விருப்பமுள்ள வர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in