

ரஷ்ய கலாச்சார மையம் சார்பில் ரஷ்ய கல்வி கண்காட்சி சென்னையில் நாளை தொடங்குகிறது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தின் துணை தூதர் மிக்கேல் கோர்படோவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ரஷ்யாவில் 650 அரசு பொறியியல் பல்கலைக்கழகங்களும், 63 அரசு மருத்துவக் பல்கலைக்கழகங்களும் உள்ளன.
இவற்றில் ரஷ்ய மொழியில் படிக்க ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 56 ஆயிரமும், ஆங்கில மொழியில் படிக்க ரூ.3 லட்சத்து 84 ஆயிரமும் செலவாகும். இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது ரஷ்ய பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் குறைவு.
இந்த பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் சேர்வதற்கான வாய்ப்புகள், கல்விக் கட்டணம், சேர்க்கை நடைமுறைகள் பற்றி விளக்குவதற்காக ஸ்டடி அப்ராட் என்ற அமைப்புடன் சேர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் ரஷ்ய கல்வி கண்காட்சியை நடத்துகிறோம்.
இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஜூன் 9-ம் தேதி மதுரையில் உள்ள ஹோட்டல் மதுரை ரெசிடென்சியில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது. அனுமதி இலவசம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதரக துணைத் தூதர் டிமிட்ரி வி.லோமாகின் உடனிருந்தார்.