

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு நேற்று நடைபெற்ற தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,287 பேரும், திருவள்ளூர் மாவட் டத்தில் 5, 373 பேரும் பங்கேற்க வில்லை.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவி யாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 179 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலி யாக உள்ளன. இந்த பணியிடங் களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 31 ஆயிரத்து 616 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாவட்டம் முழுவதும் 47 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
எனினும், இந்த தேர்வில் 25 ஆயிரத்து 329 பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 6,287 பேர் தேர்வெழுதவில்லை.
திருவள்ளூர்
பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 25 மையங்கள், திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் 32 மையங்கள் என, திருவள்ளூர் வருவாய் மாவட்டத் தில் 57 மையங்களில் தேர்வு நடந்தது.
இதில், தேர்வுக்கு விண்ணப்பித்த 29,429 பேரில், 24,056 மட்டுமே தேர்வு எழுதினர். 5,373 பேர் தேர்வு எழுதவில்லை.
கல்வித் துறையைச் சேர்ந்த 1,848 ஊழியர்கள் தேர்வு நடத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர், மாவட்ட கல்வி அலுவலர் மலர்விழி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.