நான்கு புலிக் குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் ஜெயலலிதா

நான்கு புலிக் குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் ஜெயலலிதா
Updated on
1 min read

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த 4 புலிக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா முறையே அனிதா, பிரீதா, சுனீதா, சங்கீதா என்று பெயர் சூட்டினார்.

வெள்ளைப் புலி இனத்தைச் சேர்ந்த அகாங்க்‌ஷாவுக்கு பிறந்த 4 புலிக் குட்டிகளுக்கு ஜெயலலிதா பெயர் சூட்டினார்.

2013-ம் ஆண்டும் வண்டலூர் உயிரியல் பூங்காவின் வசதி ஏற்பாடுகளை பார்வையிட வந்த ஜெயலலிதா அப்போது 7 குட்டிப்புலிகளுக்கு பெயர் சூட்டினார்.

கடந்த ஆண்டும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்த ஜெயலலிதா அப்போது 5 குட்டிப் புலிகளுக்கு பெயர் சூட்டினார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in