பொள்ளாச்சியில் கைதான 3 பேருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பா?

பொள்ளாச்சியில் கைதான 3 பேருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பா?
Updated on
1 min read

கோவையில் கைதான 5 மாவோ யிஸ்ட்களுக்கும், பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாகவும், மேலும் 3 பேரை தேடி வருவதாகவும், இது தொடர்பாக கோவையில் 2 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், கடந்த ஆண்டு மாயமானார். இதுதொடர்பாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆழியாறு போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.

சந்தோஷ்குமார் மாயமானது தொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த கணபதி (39), சுல்தான் பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55), அங்கலக்குறிச் சியைச் சேர்ந்த சிகாமணி (27) ஆகிய 3 பேரை சட்டவிரோதச் செயல்கள் தடுப்புப் பிரிவின்கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல் பட்டதாகவும், அந்த இயக்கத்துக்கு ஆட்கள் சேர்த்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர். மாயமான சந்தோஷ் குமாரையும், இவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் சேர்த்து விட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கூடுதலாக பொள்ளாச் சியைச் சேர்ந்த கணேஷ்குமார், கோவையைச் சேர்ந்த பார்த்திபன், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய 3 பேரை போலீ ஸார் தேடி வருகின்றனர். இதுதவிர கோவை பீளமேடு காவல்நிலையத் தில் 6 பேரிடம் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மாவோயிஸ்ட் ஆதரவாளர்களான கோவை போத் தனூரைச் சேர்ந்த மாசானமுத்து (23) நாகமாணிக்கம் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in