

சார்ஜாவில் உள்ள முன்னணி நிறுவனத்துக்கு ஷீட் மெட்டல் டை மேக்கர் உள்ளிட்ட பணி களுக்கு விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சார்ஜாவில் உள்ள ஓர் முன் னணி நிறுவனத்திற்கு பிரெஸ் டூல்ஸ் மற்றும் ஷீட் மெட்டல் டை மேக்கர்கள், ஸ்டீல் ஸ்டிரக்சுரல் பேப்ரிகேட்டர்கள், மில்லிங் மெஷின் ஹெலிகல் கியர் கட்டிங் இயக்குப வர்கள் மற்றும் மெஷின் ஷாப் பிட்டர்கள் தேவைப்படுகின்றனர்.
மேலும், அரபு நாடுகளில் பணி அனுபவம் உள்ள தொழிற்சாலை உற்பத்தி மற்றும் பேப்ரிகேசன் மேலாளர்கள், கன்ட்ரோல் இன்ஜி னியர்கள், கொத்தனார்கள், ஓட்டுனர் கள் உள்ளிட்டோர் தேவைப்படு கின்றனர்.
இதில் 4 ஜி/ மிக்வெல்டர், கொத் தனார் மற்றம் ஸ்டீல் பிக்சர்களுக்கு தொழில் திறன் தேர்வு நடத்தப் படுவதால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளவும்.
இபபணியிடங்களுக்கான பணி விவரங்கள், அனுபவம் , வயது வரம்பு, ஊதியம் மற்றும் இதர சலுகைகளை www.omcmanpower.com என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044- 22502267, 22505886, 08220634389 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.