Published : 02 Jun 2015 07:23 AM
Last Updated : 02 Jun 2015 07:23 AM

சமூக வலைத்தளங்களில் தேமுதிக பெயரில் போலி அறிக்கை: போலீஸ் கமிஷனரிடம் புகார்

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் போட்டியிட வில்லை என்று அதன் ‘லெட்டர் பேடில்' விஜயகாந்த் படத்துடன் அவரது கையெழுத்தும் போடப்பட்டு வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. இதைப் பார்த்த அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி ஓர் அறிக்கையை வெளியிடாத நிலையில் யாரோ திட்டமிட்டு சதி செய்திருப்பதாக அக் கட்சியினர் குற்றம் சாட்டி யுள்ளனர்.

இது குறித்து அக்கட் சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பன்னீர் செல்வம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தார்.

அதில், "தேமுதிகவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி, கட்சிக்கும், விஜயகாந்துக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் விதமாக தகவல்களை பரப்புகின்றனர். இப்படி தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x