

பரங்கிமலையில் மெட்ரோ ரயில் தூணில் பைக் மோதி 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந் தனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பாளையம் கிருஷ்ணா முதல் தெருவில் வசிப்பவர் முனுசாமி. இவரது மகன் சதீஷ்குமார் (23) பி.காம். படித்துவிட்டு வேலை தேடி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அருண் (17). அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்தார். இருவரும் நண்பர்கள். எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஒரு திருமண அலங்கார நிறுவனத்தில் தற்காலிக ஊழியர்களாக இருவரும் வேலை செய்தனர்.
குரோம்பேட்டையில் ஒரு திருமண மண்டபத்தில் அலங்கார வேலைகள் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவில் சதீஷ்குமார், அருண் இருவரும் பைக் கில் சென்றனர். அலங்கார வேலைகளை முடித்து விட்டு நேற்று காலையில் மீண்டும் வீட்டுக்கு புறப்பட் டனர். பைக்கை சதீஷ்குமார் ஓட்டினார்.
ஜி.எஸ்.டி. சாலையில் பரங்கிமலை ஆசர்கானா பகுதியில் வந்தபோது, மெட்ரோ ரயில் பாலம் கட்டுமானப் பணிக்காக சாலையில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. அதில் ஏறிய பைக் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கி கீழே சரிந்து சிறிது தூரம் இழுத்துச் சென்று, மெட்ரோ ரயில் தூணில் பலமாக மோதியது. இதில் சதீஷ் குமார், அருண் இருவருக்கும் தலை உட்பட உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட் டன. சதீஷ்குமாரின் தலை தூணில் மோதியதால் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
பரங்கிமலை போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருணை மீட்டு ராயப் பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் சிறிது நேரத்தில் இறந்து விட்டார். இருவரின் உடல்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் பலியான இருவரும் ஹெல்மெட் அணிந் திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் பரங்கிமலை போக்கு வரத்துப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். விபத்துக் குள்ளான மோட்டார் சைக்கிளை கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் சதீஷ்குமார் வாங்கியிருக்கிறார்.