

திருவள்ளூர் அருகேயுள்ள மண வாளநகர், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ராமு. டெய்லர். இவரது மகன் ஷியாம் (12). கடந்த கல்வியாண்டு வரை மண வாளநகர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஷியாமை, அவரது பெற்றோர் தற்போது திருவள்ளூர் ஜேஎன் சாலை அருகேயுள்ள பள்ளிக்கு மாற்றினர்.
ஆனால், புதிய பள்ளி பிடிக்க வில்லை என்றும் தொடர்ந்து அந்தப் பள்ளியில் படிக்க முடியாது என்றும் ஷியாம் பெற் றோரிடம் அடம்பிடித்து வந்தாராம். ஆனால், பெற்றோர் அவரை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில், தனியாக இருந்த ஷியாம், வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஷியாமை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மணவாளநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.