

பெரம்பலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை 2006-ல் திருட்டு வழக்கு ஒன்றில் போலீஸார் கைது செய்த னர். சிறையில் இருந்த ராமச்சந்தி ரனை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது வழியிலேயே இறந்தார்.
இதுதொடர்பாக காவல் ஆய்வா ளர் சிவசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் சின்னச்சாமி, லோகநாதன் ஆகியோர் மீது திருச்சி நீதிமன்றத்தில் கோட்டாட்சியர், தனி நபர் வழக்கு தொடர்ந்தார். அவரது புகாரின்பேரில் சிவசுப்பிரமணியன் உட்பட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி 2-வது கூடுதல் அமர்வு நீதிபதி, காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் உட்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித் தார். இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி 3 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை, நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்தார். விசாரணைக்குப் பிறகு, ‘‘பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ராமச்சந்திரன் இயற்கை மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இறந்தவரின் மகன், மனுதாரர்கள் தனது தந்தையை தாக்கியதாகக் கூறவில்லை. மேலும், திருத்தம் செய்யப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் 176-1ஏ பிரிவின்படி, காவல் நிலைய மரணங்கள் குறித்து விசாரணை நடத்த கோட்டாட்சியருக்கு அதிகாரம் கிடையாது. நீதித்துறை நடுவர்தான் விசாரிக்க வேண்டும். எனவே, மனுதாரர்கள் 3 பேருக்கும் கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுகிறது” என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.