Published : 19 May 2014 09:48 AM
Last Updated : 19 May 2014 09:48 AM

கோமாவில் இருந்து மீண்ட சீதாலட்சுமி: கணவர் மகிழ்ச்சி

கருணைக் கொலை செய்ய முதல்வரிடம் மனு கொடுத்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மனைவி கோமாவில் இருந்து மீண்டுள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை அரசுப் பொது மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சீதாலட்சுமியின் கணவர் சுப்பிரமணியும், அவரது குடும்பத்தினரும் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கன்னக்கோடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(35). இவரது மனைவி சீதாலட்சுமி (31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சீதாலட்சுமி அதற்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சில மாதங்க ளுக்கு முன்பு சிகிச்சை பெற்றார். அங்கு செய்யப்பட்ட தவறான அறுவைச் சிகிச்சையால், சீதாலட்சுமி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

அவரை வேறு மருத்துவமனை களில் சேர்த்து சிகிச்சை அளித்தும் பலனில்லை. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் சீதாலட்சுமி சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருடைய உடல்நிலை யில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் மனம் வெறுத்த சுப்பிர மணியம், மனைவியை கருணைக் கொலை செய்யக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தார்.

முதல்வர் ரூ.5 லட்சம்

இதையடுத்து, இந்த பிரச்சினை பெரிய அளவில் பரபரப்பாக பேசப் பட்டது. சீதாலட்சுமிக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்ததுடன், அவரது குடும்பத் துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

முதல்வர் அறிவித்த சிறப்பு மருத்துவக் குழுவினர் சீதா லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனை ஆர்எம்ஓ ஆனந்த் பிரதாப் கூறியதாவது: சீதாலட்சுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது கோமா நிலையில் இருந் தார். தீவிர சிகிச்சையின் பலனாக அவர் தற்போது கோமாவில் இருந்து வெளியே வந்துவிட்டார். கண் களைத் திறந்து பார்க்கிறார். அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு நோயாளி கோமாவில் இருந்து திடீரென மீள்வது அரிதான செயல். அவரை மீண்டும் இயல்பான நிலைக்கு மாற்ற டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x