இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு 10 கம்பெனி துணை ராணுவம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு 10 கம்பெனி துணை ராணுவம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
Updated on
1 min read

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பாதுகாப்புக்காக இந்த வார இறுதியில் 5 கம்பெனி துணை ராணுவமும் அடுத்த வாரத்தில் மேலும் 5 கம்பெனி துணை ராணுவமும் வரவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 4 பேர் கடைசி நாளில் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர். எனவே, 28 பேர் களத்தில் உள்ளனர். சசிபெருமாளின் வேட்பு மனு சரியாக நிரப்பப்படாததால் நிராகரிக்க ப்பட்டது. இடைத் தேர்தலில் 16 வேட்பாளர் களுக்கு மேல் போட்டியிடுவதால் வாக்குப் பதிவின்போது 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். முதலாவது இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயரும், 2-வது இயந்திரத்தில் மீதமுள்ள 12 வேட்பாளர்களின் பெயரும் இடம்பெறும். யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை பதிவு செய்வதற்கான நோட்டா பட்டன் வசதியும் ஏற்படுத்தப்படும்

தேர்தல் விதி மீறல்களை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப முறை, நாட்டிலேயே முதல் முறையாக ஆர்.கே. நகர் தொகுதியில் சோதனை அடிப்படை யில் அறிமுகப்படுத்தப்படும்.

இடைத்தேர்தல் பாதுகாப் புக்காக முதல்கட்டமாக இந்த வார இறுதியில் 5 கம்பெனி துணை ராணுவமும், அடுத்த வாரத்தில் மேலும் 5 கம்பெனி துணை ராணுவமும் (மொத்தம் 10 கம்பெனிகள்) வரவுள்ளன. தேர்தல் பிரச்சாரத்துக்காக 164 நட்சத்திர பேச்சாளர் களுக்கு அனுமதி அளித்துள்ளோம் இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.தேர்தல் பொது பார்வையாளர் மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சந்தீப் சக்சேனா, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பொதுப் பார்வையாளராக ஜோதி கலாஷ்தான் முதலில் நியமிக்கப் பட்டு இருந்தார். அவருக்கு முக்கியமான வேறொரு வேலை இருந்ததால், அவர் பணிக்கு வரும்வரை பொது பார்வையா ளராக ராஜு நாராயணசாமி நியமிக்கப்பட்டிருந்தார். தனது பணியை முடித்துவிட்டு ஜோதி கலாஷ் ஞாயிற்றுக்கிழமை (இன்று) வருகிறார்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in