பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் இலவச பஸ் பாஸ் விநியோகம்

பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் இலவச பஸ் பாஸ் விநியோகம்
Updated on
1 min read

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை இன்று முதல் (02.06.2015) தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டுவருகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை இன்று முதல் (02.06.2015) தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டுவருகிறது.

கடந்த ஆண்டு 25 லட்சத்து 44 ஆயிரத்து 576 இலவச பேருந்து பயண அட்டைகள் 17 மையங்களில் தயாரிக்கப்பட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவின்பேரில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உடனடியாக இலவச பேருந்து பயண அட்டைகள் கிடைத்திடும் வகையில் கூடுதலாக 5 மையங்கள் அமைத்து மொத்தம் 22 மையங்கள் மூலம் இலவச பயண அட்டைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் புதிய இலவச பேருந்து பயண அட்டை கிடைக்கும் வரை அவர்கள், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை காண்பித்து பயணிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in