

அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி மதுரவாயலில் தனியார் பள்ளியை பெற்றோர் முற்று யிட்டனர். கட்டணம் தொடர்பாக இருதரப்பினர் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.
மதுரவாயலில் உள்ள பாரதி நகரில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளி திறக்கப்பட்டது.
இப்பள்ளியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப் படுவதாக பெற்றோர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
மேலும் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோரை நேற்று வகுப்பறைக்குள் அனுமதிக் கவில்லையாம்.
இதை அறிந்து 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். அதிக கட்ட ணம் வசூலிக்கக் கூடாது என அப்போது அவர்கள் வலியுறுத் தினர். இந்தப் போராட்டத்தில் தேமுதிக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மதுரவாயல் போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பெற்றோரை சமாதானப்படுத் தினர். இதையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.
பின்னர், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மதுரவாயல் வட்டாட்சியர் தனக்கோட்டியிடம் பெற்றோர் புகார் மனு அளித்தனர். இந்நிலை யில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் பங்கேற்கும் பேச்சுவார்த்தை கூட்டம் மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடக்க உள்ளது.