

நீலகிரி மாவட்டத்தில், சுப்பராமி ரெட்டி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழுவினர் 3 நாள் பயணம் மேற் கொண்டுள்ளனர். உதகையில், வனம் மற்றும் சுற்றுச்சூழல், திடக் கழிவு மேலாண்மை, சமையல் எரிவாயு தொடர் பாக அதிகாரிகளுடன் இக்குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
செய்தியாளர்களிடம் சுப்பராமி ரெட்டி கூறும்போது, “தமிழகத்தில் உள்ள 30% வனப்பரப்பை பராமரிப்பதில் வனத் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. மனிதர்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
கே.பி.ராமலிங்கம் எம்.பி. கூறும் போது, “நுகர்வோருக்கு சமையல் எரிவாயு தாமதமின்றி எளிமையாக கிடைப்பது தொடர்பாக எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை அதிகாரிகளிடம் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
நிலத்தடியில் குழாய் பதித்து எரிவாயு எடுத்து வரும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கெயில் நிறுவன அதிகாரிகளிடம் ஆலோ சனை நடத்தப்பட்டது” என்றார்.
ஆய்வில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், வனத்துறை செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா, சுற்றுச்சூழல் துறை செயலர் பனிந்தர் ரெட்டி மற்றும் அதிகாரி கள் பங்கேற்றனர்.