பிளஸ் 2 பொதுத் தேர்வில் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு 15-ம் தேதி வெளியீடு: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு 15-ம் தேதி வெளியீடு: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
Updated on
1 min read

பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் 15-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வெழுதிய மொத்த மாணவ-மாணவிகள் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர். இவர்களில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பித்தவர்கள் ஒரு லட்சத்து 566 பேர்.

மறுகூட்டல் கோரி 2,835 பேரும் மறுமதிப்பீடு செய்யக்கோரி 3,502 பேரும் (மொத்தம் 6,337 பேர்) விண்ணப்பித்தனர். இதில் மறுகூட்டலில் மாற்றம் உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 696. மறுமதிப்பீட்டில் மாற்றம் உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 2,782. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் பட்டியல் www.scan.tndge.in என்ற இணையதளத்தில் 15-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு வெளியிடப்படும்.

இந்த பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் 16-ம் தேதி காலை 10 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை குறிப்பிட்டு திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக சான்றிதழ் களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in