அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சில பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பாடம் நடத்தும் பணிகள் பாதிப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சில பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பாடம் நடத்தும் பணிகள் பாதிப்பு
Updated on
1 min read

சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சில குறிப்பிட்ட பாடப் புத்தகங் களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால், பாடம் நடத்தும் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசு சார்பில் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கோடை விடுமுறையில் படிக்க வசதியாக 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்கள் வழங்கப்பட்டன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறந்த அன்றும், பிளஸ் 1 மாணவர்களுக்கு கடந்த வாரமும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் பிளஸ் 1 வகுப்பில் சில புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாடப் புத்தகங் கள் முழுமையாக வழங்கப் படவில்லை என புகார் எழுந்துள் ளது. சென்னையில் சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆங்கிலம், வேதியியல் தொகுதி-1, கணிதம்-1, உயிரியல் 2 தொகுதிகள் ஆகிய புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

வேறு சில இடங்களில் வணிகவியல், வரலாறு தமிழ்வழி புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலை யில், இதே பாடங்களின் ஆங்கில வழி புத்தகங்கள் வழங்கப்பட வில்லை. இதேபோல, தமிழகத் தின் பல மாவட்டங்களிலும் சில பாடங்களில் தொகுதி-1 அல்லது தொகுதி-2 புத்தகம் இல்லை என்றும், வேறு சில பாடங்களுக்கு ஆங்கிலவழி புத்தகங்கள் இல்லை என்றும் அப்பள்ளி ஆசிரியர்கள் புகார் கூறினர். இதனால், பாடம் நடத்தும் பணி பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் சிரமப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாடநூல் மற்றும் கல்விப்பணிகள் கழக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘குறிப்பிட்ட சில புத்தகங்கள் சில மாவட்டங்களுக்கு தேவையைவிட அதிகம் சென்றுவிட்டன. அத்த கைய கூடுதல் புத்தகங்கள் பற்றாக் குறையுள்ள மாவட்டங்களுக்கு விரைவில் அனுப்பப்படும்’’ என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, சென்னையில் டிபிஐ வளாகத்தில் உள்ள பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரில் பிளஸ் 1 வகுப்பு பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று ஏராளமான பெற்றோர் நீண்ட வரிசையில் நின்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in