கருணாநிதி பேரன் திருமண வரவேற்பு: ஆளுநர், ரஜினி நேரில் வாழ்த்து

கருணாநிதி பேரன் திருமண வரவேற்பு: ஆளுநர், ரஜினி நேரில் வாழ்த்து
Updated on
1 min read

திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் அருள்நிதியின் திருமண வரவேற்பில் ஆளுநர் கே.ரோசய்யா நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகனும், நடிகருமான அருள்நிதி – கீர்த்தனா திருமணம் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

அதனையொட்டி, நேற்றிரவு திருமண வரவேற்பு நடைபெற்றது. தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட் டோர் நேரில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோரும் குடும்பத்துடன் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in