கருணாநிதிக்கு இன்று 92-வது பிறந்த நாள்: சிறப்பாக கொண்டாட திமுகவினர் ஏற்பாடு

கருணாநிதிக்கு இன்று 92-வது பிறந்த நாள்: சிறப்பாக கொண்டாட திமுகவினர் ஏற்பாடு
Updated on
1 min read

திமுக தலைவர் கருணாநிதியின் 92-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ள னர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 91 வயது முடிந்து 92-வது வயது பிறக்கிறது. அவரது பிறந்தநாளையொட்டி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கருத்தரங்கம், கவியரங்கம், ஏழைகளுக்கு உதவிப் பொருள்கள் வழங்குதல், விளையாட்டுப் போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை திமுகவினர் நடத்தி வருகின்ற னர்.

கருணாநிதி, இன்று காலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் 7.15 மணிக்கு வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துகிறார். பின்னர், தனது வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அதைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாலை 6 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்திப் பேசுகின்றனர். கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார்.

சிறப்பு ஏற்பாடுகள்

இணையதளம், சமூக வலைதளங்கள் மூலம் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. www.kalaignarkarunanidhi.com என்ற கருணாநிதியின் பிரத்யேக இணையதளம் மூலமும், 54242 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கலாம்.

இதுதவிர முகநூல், ட்விட்டர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் #kalaignar92, #HBDMK, #கலைஞர் 92 ஆகிய ஹாஸ்டாக் மூலம் வாழ்த்து தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட திமுகவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in