Published : 05 Jun 2015 08:27 AM
Last Updated : 05 Jun 2015 08:27 AM

அந்நிய உணவு பொருட்களை சோதனைக்குப் பிறகே அனுமதிக்க வேண்டும்: டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

‘மேகி’ நூடுல்ஸ் மட்டுமல்லாது அந்நிய நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களையும், இந்திய உணவுப் பாதுகாப்பு நிறு வனம் சோதனையிட்ட பிறகே, அவற்றை விற்பனைக்கு அனு மதிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத் தினார்.

கோவையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது:

‘மேகி’ நூடுல்ஸில் மோனோ சோடியம் குளூடாமேட் என்ற ரசாயன உப்பு, லெட் எனப்படும் காரீயம் ஆகியன அளவுக்கு அதிகமாக இருப்பதை கண்ட றிந்து, அதை உட்கொண் டவர்கள் பல்வேறு உபாதை களுக்கு ஆட்பட்டதால், உ.பி. அரசு அதை தடை செய்துள்ளது.

பன்னாட்டு நிறுவனம் ஓர் உணவுப்பொருளை உற்பத்தி செய்து அவற்றை விற்பனைக்கு நாட்டில் பரிமாற்றம் செய்யும் நிலையில், அவ்வப்போது இந்திய உணவுக்கழகம் தர நிர்ணயம் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்தார்களா என்று தெரியவில்லை.

தற்போது தாய்மார்கள் தாய்ப் பாலுக்கு பதிலாக, கார்ப்பரேட் கம்பெனிகளின் பால்பவுடர் களையும் ரெடிமேடு பால் டின்களையும் பயன்படுத்து கிறார்கள். அவற்றால் என்னென்ன பின்விளைவுகள் இருக்கின்றன என்பதே தெரிவதில்லை.

எனவே மத்திய, மாநில அரசுகள் உடனே உணவுப் பாதுகாப்புத் துறையை முடுக்கிவிட்டு, உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் மீது புதியதொரு ஆய்வில் இறங்க வேண்டும். ஒவ்வொரு பொருட்களையும் சோதனையிட்ட பிறகே அனுமதிக்க வேண்டும். தரமின்றி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அந்நிய நாட்டு கம்பெனிகளின் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தமிழக அரசும் மத்திய அரசும் தடை செய்ய வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x