Published : 06 Jun 2015 12:09 PM
Last Updated : 06 Jun 2015 12:09 PM

முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி

முதல்வர் ஜெயலலிதா தனது சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 2006-ல் . ரூ.24.7 கோடியாகவும், 2011-ல் ரூ.51.40 கோடியாகவும் இருந்தது. இது தற்போது இரு மடங்காக உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அத்துடன் தனது அசையும் - அசையா சொத்து விவரங்களையும் அவர் தாக்கல் செய்திருந்தார். அதன் விவரம் வருமாறு:

2013–2014–ம் ஆண்டு வங்கிக் கணக்குப்படி மொத்த வருமானம்: ரூ.33,22,730 | கையிருப்பு - ரூ.39,000 | வங்கி கணக்கில் சேமிப்பு தொகை - 9 கோடியே 80 லட்சத்து 9,639 ரூபாய் | மைலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கி கணக்கு உள்பட வழக்கில் முடக்கப்பட்ட தொகை - ரூ.2 கோடியே 47 லட்சத்து 74,945 ரூபாய்.

ஐந்து நிறுவனங்களில் தொழில் முதலீட்டு தொகை - 31 கோடியே 68 லட்சத்து 82,808 ரூபாய் | 9 சொந்த வாகனங்களின் மதிப்பு - ரூ.42,25,000 | வெள்ளிப் பொருட்கள் - 1,250 கிலோ (ஒரு கிலோவுக்கு ரூ.25,000 என்ற மதிப்பில் மொத்த மதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 50,000 ரூபாய். | வழக்கில் முடக்கப்பட்ட தங்க நகைகள் 21,280.300 கிராம்.

காஞ்சீபுரம், ஹைதரபாத்தில் இருக்கும் 17.93 ஏக்கர் விவசாய நிலங்களின் மதிப்பு -14 கோடியே 78 லட்சத்து 37,300 ரூபாய் | சென்னை போயஸ் கார்டன், மந்தைவெளி, தேனாம்பேட்டை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள வணிக கட்டிடங்களின் மதிப்பு - 13 கோடியே 34 லட்சத்து 70,990 ரூபாய் | போயஸ் கார்டன் வீட்டின் மதிப்பு - 43 கோடியே 96 லட்சத்து 74,900 ரூபாய்.

ஒட்டுமொத்த அசையா சொத்தின் மதிப்பு - 72 கோடியே 9 லட்சத்து 83,190 ரூபாய் | ஒட்டுமொத்த அசையும் சொத்தின் மதிப்பு - 45 கோடியே 4 லட்சத்து 6,447 ரூபாய் | ஜெயலலிதா பெயரில் உள்ள மொத்த வங்கிக் கடன் மதிப்பு ரூ.2 கோடியே 4 லட்சத்து 2,987. | மொத்த சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x