Last Updated : 22 Jun, 2015 10:14 AM

 

Published : 22 Jun 2015 10:14 AM
Last Updated : 22 Jun 2015 10:14 AM

திருவிடைமருதூரில் அழிவின் விளிம்பில் 3-ம் குலோத்துங்க சோழன் கால கோயில்

திருவிடைமருதூர் என்றதும் நினைவுக்கு வருவது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருபுவனத்துக்கு அடுத்துள்ள ஊர்தான். ஆனால், இங்கு குறிப்பிடப்படுவது நாகை மாவட்டத்தில் திருக்குவளைக்கு அருகில் உள்ள திருவிடைமருதூர்.

1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் புராதனச் சிறப்புமிக்க தஞ்சை மாவட்ட கோயிலில் உள்ள மகாலிங்க சுவாமியை வணங்கு வது அக்காலத்தில் எல்லோரா லும் இயலாதது என்பதால், கீழத் தஞ்சை மாவட்ட மக்களுக்காக திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி கோயிலை 3-ம் குலோத் துங்க சோழன் கட்டியிருக்கிறார். சோழர்கள் காலத்தில் சாத்தமங்க லம் என்று அழைக்கப்பட்ட இந்த திருவிடைமருதூர் குலோத்துங்கன் கோயில் கட்டியதும் குலோத்துங்க சோழீஸ்வரம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஊரில் புத்தவிகாரம் ஒன்று இருந்ததாக தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட் டுள்ளது. கங்கைகொண்ட சோழ புரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட 2-ம் ராஜராஜனின் மகனான 3-ம் குலோத்துங்கன், இவ்வூரில், பழமையான திருவிடைமருதூர் கோயிலைப் போன்ற அமைப்பில் இக்கோயிலைக் கட்டி, அதே போன்ற லிங்கத்தை நிறுவி மகாலிங்க சுவாமி என்றே பெயரும் வைத்தார். இக்கோயில் அம்மனுக்கு பெருவிளமாமுலையம்மன் என்று பெயர்.

இரண்டு பிரகாரங்களை உடை யதாகவும், கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சன்னதி என்று மிக அழகாக திட்ட மிட்டு 1178-1218-ம் ஆண்டு கால கட்டத்தில் கட்டப்பட்ட இக்கோயில் காலப்போக்கில் எவ்வித பராம ரிப்பும் இன்றி கொஞ்சம் கொஞ்ச மாக சிதிலமடைந்து தற்போது கர்ப்பக்கிரகம் மட்டுமே எஞ்சி யுள்ளது.

இந்த கர்ப்பக்கிரகத்தைப் பார்த் தாலே கோயிலின் கலையம்சம் முழுவதுமாக நமக்கு தெரியவரும். அஸ்திவாரம் முழுவதும் பள பளப்பான சலவைக் கல்லைப் போன்ற கருங்கற்களால் அமைக் கப்பட்டுள்ளது. அதற்கு மேல் செங் கற்களால் செய்யப்பட்ட திருப்பணி யும் தற்போது சிதிலமடைந்துள்ளது.

அஸ்திவார கற்களில் விரல் அளவேயுள்ள சிற்பங்கள் மிக மிக துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன. நடனப் பெண்மணி, குழலூதும் கண்ணன் சிற்பங்கள் அற்புத அழகோடு விளங்குகின்றன. அபி ஷேக நீர் வெளியேறும் கோமு கம் உலோகத்தால் ஆனதுபோல அவ்வளவு உறுதியாகவும் அழ காகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்கோயில் குறித்து ஆராய்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குட வாயில் பாலசுப்ரமணியன் கூறும் போது, “தன்னுடைய ஆட்சியில் இப்பகுதி மக்களும் மகா லிங்கேஸ்வரரை வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 3-ம் குலோத்துங்கன் இக்கோயிலை அமைத்திருக்கிறார். இக்கோயில் மற்றும் ஊரைப் பற்றி திருத் துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ் வரர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ் வரர் கோயில்களில் உள்ள கல் வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள் ளது. இக்கோயிலைக் கட்டிய குலோத்துங்கன் கோயிலின் பலி பீடத்துக்கு வெளியே நின்று இறை வனை வணங்கும்படியாக தனக்கும் ஒரு சிலை வடிவமைத்துள்ளான். இதுதான் எல்லாவற்றையும் கடந்த ஒரு சிறப்பு.

இதேபோன்று 3-ம் குலோத்துங் கனின் சிலைகள் கும்பகோணம், திருமண்டக்குடி, அகரஓகை, திருவாலங்காடு ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களிலும் காணப் படுகின்றன.

இக்கோயில் தமிழர்களின், குறிப்பாகச் சோழர்களின் வரலாற்றை விளக்கும் சான்று ஆவணமாகவும் விளங்குகிறது. இவற்றைப் பாதுகாக்க மக்களும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

அழியும் நிலையில் உள்ள பழமையான திருக்கோயில்களை புனர் நிர்மானம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கும்பகோணம் ஜோதி மலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கூறியபோது, “திருவிடைமருதூர் மக்களும், பக்தர்களும் இக் கோயிலை முற்றிலுமாக அழிய விட்டுவிடாமல் அம்மன் சன்னதி முன்பாக ஒரு தற்காலிக கூடம் அமைத்து அதில் கோயிலின் பழமையான சுவாமி சிலைகளை வைத்து பாதுகாத்து வருகின்றனர். இக்கோயிலைப் புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x