2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில் 3-வது அணி அமைவது உறுதி: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில் 3-வது அணி அமைவது உறுதி: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
Updated on
2 min read

தமிழகத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில் 3-வது அணி அமைவது உறுதி என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏகூட இல்லாத நிலையில் 2016-ல் ஆட்சி அமைப்போம் என்று எந்த நம்பிக்கை யில் கூறுகிறீர்கள்?

எம்எல்ஏக்களின் எண்ணிக் கையை வைத்து கட்சியின் பலத்தை எடைபோடக் கூடாது. கட்சியின் பலம், அரசியல் சூழல் ஆகி யவையே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கின்றன. தற்போதைய அரசியல் சூழல் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 5.6 சதவீத வாக்குகளைப் பெற்று 3-வது கட்சியாக உருவெடுத்தது. கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு 22 சதவீத வாக்கு களைப் பெற்றோம். தற்போது பாஜகவில் 40 லட்சம் உறுப்பினர் கள் உள்ளன. முதல்முறையாக பாஜகவுக்கு வாக்குச் சாவடி அளவில் குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன. இதை வைத்துதான் 2016-ல் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கையோடு பேசுகிறோம்.

நீங்கள் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன், எச்.ராஜா ஆகியோர் தமிழக அரசை பாராட்டுகிறார்களே?

அவர்கள் அதிமுக அரசை ஒருபோதும் பாராட்டவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஜெயலலிதா முதல்வரானால் அரசு இயந்திரம் வேகமாக செயல்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறி யது தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தனர். நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜெயலலிதாவை வீடு தேடி வந்து சந்திக்கிறார். இதை எப்படி எடுத்துக்கொள்வது?

பாஜகவைப் பொறுத்தவரை ஆட்சி வேறு, கட்சி வேறு என்பதில் தெளிவாக இருக்கிறோம். மாநில அரசுகளுடன் இணக்கமாக சென் றால்தான் மக்களுக்கான திட்டங் களை நிறைவேற்ற முடியும். அந்த அடிப்படையில் ஜெயலலிதாவை ஜேட்லி சந்தித்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் மத்திய அமைச்சர்கள் சந்திக்கின் றனர். இதற்கும் கட்சியின் செயல் பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அதிமுக பாஜக கூட்டணி உருவாகி விட்டது என்பதுபோல பேசப்படு கிறதே?

தமிழகத்தில் பாஜக வளரக் கூடாது என்று நினைப்பவர்களின் திட்டமிட்ட பிரச்சாரம் இது. பாஜக வாக்கு வங்கியை அதிமுகவுக்கு கடத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்கிறேன். இதில் துளியும் உண்மை இல்லை.

பாஜக மேலிடத்தின் அனுமதியுடன் தான் அதிமுக அரசை விமர்சிக் கிறீர்களா?

தனி நபராக எனது கருத்தை எங்கும் சொல்லவில்லை. கட்சி மேலிடத்தின் குரலைத்தான் வெளிப்படுத்தி வருகிறேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் பாஜக மேலிடம் உறுதி யாக உள்ளதா?

தேசிய அளவில் ஊழல் எதிர்ப் பில் பாஜக மேலிடம் உறுதியாக உள்ளது. அப்படி இருக்கும்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அதிமுகவுடன் எப்படி கூட்டணி அமைக்க முடியும்? திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராகவே உள்ளன. நாங்கள்தான் அவர்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை.

அப்படியெனில் 2014 மக்களவைத் தேர்தலைப் போல 3-வது அணி அமையுமா? அதில் தேமுதிக இடம் பெறுமா?

2016 தேர்தலில் பாஜக தலைமை யில் 3-வது அணி அமைவது உறுதி. அதில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கண்டிப்பாக இடம்பெறும். இந்த அணி கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும்.

மத்திய அரசு மீது பாமக தினமும் ஒரு குற்றச்சாட்டை கூறுகிறது. தேமுதிகவும் அதிருப்தியில் இருப் பதாகக் கூறப்படுகிறதே?

ஒவ்வொரு கட்சிக்கும் தனிப் பட்ட கருத்து உண்டு. அந்த அடிப் படையில் ராமதாஸ் விமர்சிக்கிறார். கூட்டணியில் இருந்து கொண்டு பகிரங்கமாக மத்திய அரசை விமர் சிப்பது சரியானது அல்ல என்பதை பலமுறை கூறிவிட்டேன். தேமுதிகவுடன் எந்த அதிருப்தியும் இல்லை.

தேர்தலுக்காக காவிரி பிரச்சினையை தமிழக கட்சிகள் அரசியலாக்குவதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா குற்றம்சாட்டியுள்ளாரே?

அவரது கருத்தில் தமிழக பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. மாநிலக் கட்சிகளுக்கு தேசிய சிந்தனை இருக்க வேண்டும். தேசியக் கட்சிகளுக்கு மாநிலங் களின் நலனில் அக்கறை இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. தமிழகத்தின் நலன் களைப் பாதுகாப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in