Published : 22 Jun 2015 07:40 AM
Last Updated : 22 Jun 2015 07:40 AM

விழுப்புரம் அருகே வீரப்பன், பிரபாகரன் சிலைகளை கோயிலில் வைத்து வழிபட்ட மக்கள்

விழுப்புரம் அருகே கோயிலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப் பட்ட வீரப்பன், பிரபாகரன் சிலைகளை போலீஸார் கண்டறிந் தனர். இச்சிலைகளை போலீஸாரின் அறிவுறுத்தலுக்கேற்ப கிராம மக்கள் அகற்ற ஒப்புக்கொண்டனர்.

விழுப்புரம் அருகே கண்ட மங்கலம் போலீஸ் சரகத்துக் குட்பட்டது சடையாண்டிகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் ஊருக்கு வெளியே ஐயனாரப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த 2010-ல் கட்டப்பட்டது. அப்போது 25 அடி உயர ஐயனாரப்பன் சிலைக்கு வலது புறத்தில் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிலையும், இடது புறத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் சிலையும் நிறுவி அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அந்த கிராமத்தில் இந்த 2 சிலைகள் கோயிலில் வைத்திருப்பது குறித்து கண்டமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்துக்கு சென்ற போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர்களின் சிலைகள் வைப்பது தவறு என்றும் அவற்றை விரைவில் அகற்ற வேண்டும் எனவும் எச்சரித்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x