

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் என 4 கோட்டங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனபோதிலும் தெற்கு ரயில்வே நடத்தும் ஆர்ஆர்சி, ஆர்ஆர்பி தேர்வுகளில் பிற மாநிலத்தவரின் ஆதிக்கமே அதிகம்.
‘சான்றிதழ்களில் அரசுத் துறை அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை. சுய ஒப்பமிட்டு விண்ணப்பித்தாலே போதும்’ என்று இந்திய அரசும், தமிழக அரசும் அறிவித்துள்ளன. ஆனால், கடந்த ஆண்டு ஆர்ஆர்சி தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 11 லட்சம் விண்ணப்பங் களில், அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் இல்லை என்று கூறி 2 லட்சம் தமிழர் களின் விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் மறு பரிசீலனை செய்து, தேர்வு எழுத தமிழக மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.
தமிழக வேலைவாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இனி பணி பழகுநராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஐசிஎப் அறிவித்ததுபோல, தெற்கு ரயில்வேயும் அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.