கோயில் பூசாரி தற்கொலை வழக்கு: ஓ.பி.எஸ். சகோதரர் உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

கோயில் பூசாரி தற்கொலை வழக்கு: ஓ.பி.எஸ். சகோதரர் உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் டி.கள்ளிப்பட்டி அம்பேத் கர் நகரை சேர்ந்த என்.சுப்பு ராஜ். இவரது மகன் நாகமுத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக பணி புரிந்தார். அவர் 7.12.2012-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

அவரை தற்கொலைக்குத் தூண் டியதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகர சபை தலைவருமான ஓ.ராஜா உட்பட பலர் மீது தென்கரை போலீ ஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சுப்புராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பெரியகுளம் டிஎஸ்பி உமா மகேஸ்வரன் தாக்கல் செய்த பதில் மனுவில், நாகமுத்து தற் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 38 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற விசாரணையில் நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந் துள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஏற்கெனவே விசாரித்த நிலையில், நேற்றைக்கு ஒத்திவைத்து, அன்று வழக்கு விசாரணை தொடர்பான கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த மனு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது பெரிய குளம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப் பட்டுவிட்டது என்றார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீ ஸார் விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகையை நீதிமன்றத் தில் தாக்கல் செய்துவிட்டனர். இதனால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டிய தேவையில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என் றார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக பெரியகுளம் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேரும் வரும் 26-ம் தேதி ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in