இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவாக இருசக்கர வாகன பேரணி

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவாக இருசக்கர வாகன பேரணி
Updated on
1 min read

ஆர்.கே.நகரில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நேற்று இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்வர் ஜெய லலிதா (அதிமுக), சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சமூக ஆர் வலர் டிராஃபிக் ராமசாமி உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர்.

இன்று மாலை 5 மணியோடு பிரச்சாரம் முடிய உள்ள நிலையில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சி.மகேந்திரனுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நேற்று இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் கே.என்.எஸ். டிப்போ அருகே தொடங்கிய இந்த பேரணி, மீனாம்பாள் நகர், பாரதி நகர், அண்ணா தெரு, அஜீஸ் நகர், நேதாஜி நகர், வைத்தியநாதன் பாலம், நாகூரான் தோட்டம், செரியன் நகர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஜீவா நகர் வழியாக வ.உ.சி. நகர் மார்க்கெட் பகுதியை வந்தடைந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், வேட்பாளர் சி.மகேந்திரன் உள்பட 500-க்கும் அதிகமானோர் பேரணியில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ஜி.ராமகிருஷ் ணன், ‘‘ஜனநாயகத்தை காப்பாற் றும் வகையில் அடித்தட்டு மக்களுக் காக குரல் கொடுத்து வரும் கம்யூ னிஸ்ட் கட்சிகளின் சார்பில் போட்டி யிடும் சி.மகேந்திரனுக்கு வாக் களிக்க வேண்டும்’’ என வாக்காளர் களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in