

மதுரவாயலில் 2 குழந்தை கள் கொலை செய்யப்பட்டதில் கணவர் மீது சந்தேகம் உள்ளதாக அந்த குழந்தைகளின் தாய் போலீஸாரிடம் கூறியுள்ளார்.
மதுரவாயல் காவல் நிலையம் அருகே எம்.எம்.டி.ஏ. காலனியில் வசிப்பவர் வழக்கறிஞர் ரவி (40). இவரது மனைவி மகேஸ்வரி. இருவரும் வழக்கறிஞர்கள். இவர்கள் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் குழந்தைகள் பிரியதர்ஷினி (13). பிரபு (11) ஆகியோர் ரவியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ரவியின் வீட்டில் பிரியதர்ஷினியும், பிரபுவும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். ரவி காணாமல் போயுள்ளார். அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரனை
இதுதொடர்பாக மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். ரவியையும் தீவிர மாக தேடி வருகின்றனர். இந்நிலையில் மகேஸ்வரியிடம் போலீஸார் விசாரணை நடத் தினர். விசாரணையின்போது, “எங்களுக்கு 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குழந்தைகளை பள்ளிக்குகூடம் அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே ரவி பூட்டி வைத்திருந்தார். கடந்த 29-ம் தேதி நான் அவரிடம் போனில் பேசினேன். அப்போது குழந்தை களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. எனக்கு அவர் மீதுதான் சந்தேகமாக உள்ளது” என்று மகேஸ்வரி கூறியுள்ளார்.