

மாநகராட்சி மண்டல அலுவலகங் களிலேயே ஆதார் அட்டைகளை அச்சடித்து பெற்றுக் கொள்ளும் வசதி சென்னையில் அடுத்த வாரம் அறிமுகமாகிறது.
ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு இந்திய அரசு தற்போது அஞ்சல் மூலம் ஆதார் அட்டைகளை அனுப்பி வருகிறது. இந்த அட்டைகளை இனி மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலேயே வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வந்த ஆதார் அட்டைகள் லேசாக இருக்கும். ஆனால் மண்டல அலுவல கங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் இதற்கு ரூ.40 செலுத்த வேண்டும்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவிக்கும்போது, “ஆன்லைனில் உள்ள இ-ஆதார் எண்ணை மண்டல அலுவலகத் தில் தெரிவிக்க வேண்டும். பிறகு விண்ணப்பதாரரின் கை ரேகை கணினியில் உள்ள கைரேகை யுடன் ஒத்துப் போகிறதா என்று சரி பார்த்தவுடன், ஆதார் அட்டைகள் அச்சடித்து தரப்படும். இது ஓட்டுநர் உரிமம் போல பிளாஸ்டிக் அட்டைகளாக இருக்கும்” என்றார்.
அஞ்சல் மூலம் ஆதார் அட்டைகளை ஏற்கெனவே பெற்றவர்களும் இந்த பிளாஸ்டிக் அட்டைகளை பெற்றுக் கொள் ளலாம். அவர்கள் தங்களது பழைய ஆதார் அட்டைகளை மண்டல அலுவலகத்தில் காண் பித்து, ரூ.30 கட்டணம் செலுத்தி இதைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதி சென்னையில் 10 தாலுகா அலுவலகங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில இடங்களிலும் சோதனை முறையில் ஏற்கெனவே அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது.
ஆதார்பதிவை பரவலாக்க அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு பதிவு செய்யும் வசதி விரைவில் தொடங்கப்படவுள்ளது.