

கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு கிராமத்தில் தனியார் அரிசி ஆலையில் கொத்தடி மைகளாக பணி புரிந்து வந்த 5 குடும்பங்களை சேர்ந்த 14 குழந்தைகள் உள்ளிட்ட 29 பேரை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு கிராமத்தில், தன சேகர் (32) என்பவருக்கு சொந் தமான அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில், இருளர் இனத்தை சேர்ந்த 5 குடும்பங்கள் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக, தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து, காயரம்பேடு வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், செங்கல்பட்டு கோட் டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில், செங்கல்பட்டு வட்டாட்சியர் பஷிரா மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் வாங்கிய ரூ.5 ஆயிரம் மற்றும் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்துக்கு கடனாக பெற்ற ரூ.4 ஆயிரத்துக்கும், கொத் தடிமைகளாக பணிபுரிந்து வந்த, 5 இருளர் குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆண்கள், 7 பெண்கள், 14 குழந்தைகள் என 29 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் கூறியதாவது: காயரம்பேடு பகுதி யில் கொத்தடிமைகளாக இருந்த இருளர் இனத்தை சேர்ந்த 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள், அதே பகுதியில் பிறந்து வளர்ந்துள்ளனர். இதனால், அவர்களின் பூர்வீக இடமாக காயரம்பேடு கருதப்படும். பெற் றோர்கள் வாங்கி கடனுக்காக அரிசி ஆலையில் கொத்தடிமை களாக பணிபுரிந்து வந்ததால் அவர்களை மீட்டுள்ளோம்.
மீட்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக அரசு உதவிப் பணமாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சொந்த வீடுகள் இல்லாததாலும், மீட்கப்பட்ட இடமே பூர்வீகமாக கருதுவதால் ஆதிதிராவிடர் திட்டத்தில் இலவச வீட்டு மனைகள் வழங்க பரிந்துரை செய்யப்படும்.
தற்போது திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள சத்யாநகரில் இருளர் மக்கள் வசிக்கும் பகுதி யில் தற்காலிக குடியிருப்புகளில் இவர்கள் வசிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் அரசி ஆலையின் உரிமையாளர் மீது, கூடு வாஞ்சேரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.