ஏடிஎம் தகர்ப்பு வழக்கு: எஸ்ஐ-க்கு எஸ்பி பாராட்டு

ஏடிஎம் தகர்ப்பு வழக்கு: எஸ்ஐ-க்கு எஸ்பி பாராட்டு
Updated on
1 min read

தொடர் ஏடிஎம் தகர்ப்பு வழக்கில் குற்றவாளியை கைது செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்த காவல் துறை உதவி ஆய்வாளர் பிரபாகரனுக்கு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி செ.விஜய குமார் புதன்கிழமை பாராட்டு தெரி வித்தார்.

திருப்போரூரில் கடந்த மே 4-ம் தேதி ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர் வெடி வைத்து தகர்த்து, அதில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் போலீஸாரால் குற்றவாளியை அடையாளம் காண முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி கூடுவாஞ்சேரியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர் வெடி வைத்து தகர்த்து பணத்தை எடுக்க முயன்றார். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற கூடுவாஞ்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, ஏடிஎம்மை நெருங்கினார். அப்போது அதனுள் இருந்த கொள்ளையன் தப்பியோடினார். அவரை பிரபாகரன் விரட்டியதில் கைப் பை மற்றும் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு மர்ம நபர் ஓடினார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து விசாரணையைத் தொடங்கியதில் திருச்சியைச் சேர்ந்த குமார் சிக்கினார்.

இவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சியில் கடந்த ஆண்டு நடந்த ஏடிஎம்மை தகர்த்து ரூ.21 லட்சம் கொள்ளையடித்த வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. திருப் போரூர் ஏடிஎம் தகர்ப்பையும் இவர்தான் செய்துள்ளார்.

தொடர் ஏடிஎம் கொள்ளையனை கண்டுபிடிக்க முக்கிய காரணமாக இருந்த கூடுவாஞ்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரனை காஞ்சிபுரம் எஸ்பி செ.விஜயகுமார் புதன்கிழமை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in