

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் நேற்று ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மழை பதிவாகியிருந்தது. தேனி மாவட்டம் பெரியாரில் 3 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை, மயிலாடி ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ மழை பெய்தது.
தமிழகத்தின் பல நகரங்களில் நேற்று வெயில் அதிகமாக காணப்பட்டது. புதுச்சேரியில் 39 டிகிரி, கடலூரில் 38.6 டிகிரி, சென்னையில் 37.1 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 36.5 டிகிரி, பாம்பனில் 35.5 டிகிரி, கரூரில் 35.5 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இதனிடையே சென்னையில் நேற்று இரவு சில இடங்களில் திடீரென லேசான மழை பெய்தது.