

உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக குறைந்தது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையொட்டி அவருக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிரிவுபசார விழா நடைபெற்றது. விழாவில், நீதிபதியை வாழ்த்தி தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி பேசினார். நீதிபதி ராமநாதன் ஏற்புரையாற்றும்போது உருக்கமாக பேசி விடைபெற்றார்.
இவ்விழாவில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்றப் பணியாளர்கள், நீதிபதி ராமநாதன் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
நீதிபதி ராமநாதன் ஓய்வுபெற்றதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக குறைந்துள்ளது.
நீதிபதிகள் காலியிடங்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருக்கிறது.